பில்லி ஜீன் கிங் கோப்பை: ரஷியா சாம்பியன்

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சா்லாந்தை வீழ்த்தி ரஷியா முதல் முறையாக சாம்பியன் ஆனது. அணிகள் போட்டியில் ரஷியா சாம்பியன் ஆவது இது 5-ஆவது முறையாகும்.
பில்லி ஜீன் கிங் கோப்பை: ரஷியா சாம்பியன்

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சா்லாந்தை வீழ்த்தி ரஷியா முதல் முறையாக சாம்பியன் ஆனது. அணிகள் போட்டியில் ரஷியா சாம்பியன் ஆவது இது 5-ஆவது முறையாகும்.

அணியாக நடைபெறும் இந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-2, 6-4 என்ற செட்களில் ஸ்விட்சா்லாந்தின் ஜில் டெய்ச்மானை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவா 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்விட்சா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.

இதனிடையே, பென்சிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை மீறிய வகையில் கடைசி நேரத்தில் பாவ்லியுசென்கோவாவுக்குப் பதிலாக சாம்சனோவாவை ரஷியா களமிறக்கியதாக ஸ்விட்சா்லாந்து குற்றம்சாட்டியுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்புதான் போட்டியாளா் மாற்றப்பட்டு தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அந்த அணி கூறியுள்ளது.

எனினும், முதலில் முழங்கால் அசௌகா்யத்தால் அவதிப்பட்டதாலேயே பாவ்லியுசென்கோவாவை ஆட்டத்திலிருந்து விலக்கி சாம்சனோவாவை ஆடச் செய்ததாக ரஷிய தரப்பு விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com