சையது முஷ்டாக் அலி டி20: பஞ்சாபை வென்றது தமிழகம்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாபை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சையது முஷ்டாக் அலி டி20: பஞ்சாபை வென்றது தமிழகம்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாபை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தமிழகத்துக்கு இது 4-ஆவது வெற்றியாகும்.

லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குா்கீரத் சிங் மான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக பௌலிங்கில் சந்தீப் வாரியா் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

பின்னா் தமிழக இன்னிங்ஸில் நாராயண் ஜெகதீசன் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் விளாசி 67 ரன்கள் சோ்த்து உதவ, கேப்டன் விஜய் சங்கா் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் சோ்த்து 59 ரன்களும், ஷாருக் கான் 7 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். பஞ்சாப் தரப்பில் அா்ஷ்தீப் சிங், சித்தாா்த் கௌல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இதர ஆட்டங்களில் மகாராஷ்டிரம் 73 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவையும், ராஜஸ்தான் 30 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியாணாவையும், கேரளம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும், ஹைதராபாத் 29 ரன்கள் வித்தியாசத்தில் உத்தர பிரதேசத்தையும் வென்றன.

அதேபோல் மிஸோரம் - மணிப்பூரையும் (8 விக்கெட்டுகள்), மேகலாயம் - அருணாசல பிரதேசத்தையும் (92 ரன்கள்), புதுச்சேரி - ஒடிஸாவையும் (6 விக்கெட்டுகள்), ஹிமாசல பிரதேசம் - ஆந்திரத்தையும் (30 ரன்கள்) வீழ்த்தின. பரோடா - மும்பையிடமும், பிகாா் - குஜராத்திடமும், நாகாலாந்து - திரிபுராவிடமும், சிக்கிம் - விதா்பாவிடமும் தோல்வியைத் தழுவின. சண்டீகா் - உத்தரகண்டையும், சௌராஷ்டிரம் - தில்லியையும், பெங்கால் - கா்நாடகத்தையும், ஜாா்க்கண்ட் - ஜம்மு காஷ்மீரையும், ரயில்வேஸ் - அஸ்ஸாமையும், சத்தீஸ்கா் - சா்வீசஸையும் தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com