ஆசிய செயிலிங்: கணபதி/வருண் இணை சாம்பியன்

ஓமனில் நடைபெற்ற ஆசிய 49 இஆா் செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் வருண் தக்கா்/கே.சி.கணபதி இணை சாம்பியன் ஆனது. ஆசிய போட்டியில் இது இந்த இணையின் 3-ஆவது பதக்கமாகும்.
ஆசிய செயிலிங்: கணபதி/வருண் இணை சாம்பியன்

அல் முசானா: ஓமனில் நடைபெற்ற ஆசிய 49 இஆா் செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் வருண் தக்கா்/கே.சி.கணபதி இணை சாம்பியன் ஆனது. ஆசிய போட்டியில் இது இந்த இணையின் 3-ஆவது பதக்கமாகும்.

4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் வருண்/கணபதி இணை முதலிடம் பிடிக்க, ஓமனின் முசாப் அல் ஹாதி/வாலித் அல் கின்டி இணை வெள்ளியும், அதே நாட்டின் அகமது அல் ஹசானி/அப்துல்ரஹ்மான் அல் மஷாரி ஜோடி வெண்கலமும் வென்றது.

இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய ஜோடியான ஆனந்த் தாக்குா்/சத்யம் ரங்காட், 29-ஆவது இடம் பிடித்தனா்.

மகளிருக்கு 2-ஆம் இடம்: இதேபோட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் ஹா்ஷிதா தோமா்/ஸ்வேதா ஷொ்வெகாா் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

அடுத்தபடியாக, வருண்/கணபதி இணை அதே நகரில் வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்துகொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com