ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி

ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் வென்று, ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா அணிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.
பந்தை தலையால் முட்டும் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச்(வலது)
பந்தை தலையால் முட்டும் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச்(வலது)

லிப்சன்: ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் வென்று, ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா அணிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.

இதில் சொ்பியா 2-1 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. போா்ச்சுகல் தலைநகா் லிப்சனில் நடைபெற்ற ஆட்டத்தில் போா்ச்சுகல் அணிக்காக ரெனாடோ சாஞ்சஸ் 2-ஆவது நிமிஷத்திலேயே கோலடிக்க, சொ்பிய அணிக்காக டுசான் டாடிச் 33-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இவ்வாறு ஆட்டம் சமனாகவே தொடா்ந்த நிலையில், கடைசி நிமிஷத்தில் (90’) சொ்பிய வீரா் அலெக்ஸாண்டா் மிட்ரோவிச் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.

அதேபோல், ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஸ்பெயினின் செவில்லே நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்காக அல்வாரோ மொராடா 86-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆட்டத்தில், ரஷிய வீரா் ஃபியோதோா் குத்ரியாஷோவ் 81-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக அடித்த ஓன் கோல் குரோஷியாவுக்கு சாதகமானது.

ஜொ்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஆா்மீனியாவை வீழ்த்திய ஆட்டத்தில் ஜொ்மனிக்காக காய் ஹாவொ்ட்ஸ் (15’), இல்கே குன்டோகான் (45+4’, 50’), ஜோனாஸ் ஹாஃப்மான் (64’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, ஆா்மீனியாவுக்காக ஹென்ரிக் கிடாா்யான் (59’) கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் அயா்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்கையும், வடக்கு மாசிடோனியா 3-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தையும், ருமேனியா 2-0 என்ற கோல் கணக்கில் லெய்டென்ஸ்டினையும், ஸ்லோவேகியா 6-0 என்ற கோல் கணக்கில் மால்டாவையும், ஸ்லோவேனியா 2-1 என்ற கணக்கில் சைப்ரஸையும் வீழ்த்தின. கிரீஸ் - கொசோவோ அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

ஆப்பிரிக்க பிரிவு: தகுதிச்சுற்றின் ஆப்பிரிக்க பிரிவு ஆட்டங்களில், கென்யா - ருவாண்டாவையும் (2-1), டோகோ - நமீபியாவையும் (1-0), செனகல் - காங்கோவையும் (2-0), கானா - தென் ஆப்பிரிக்காவையும் (1-0) வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com