இந்திய அணி பந்துவீச்சு தேர்வு: வெங்கடேஷ் ஐயர் அறிமுகம்
By DIN | Published On : 17th November 2021 06:56 PM | Last Updated : 17th November 2021 06:56 PM | அ+அ அ- |

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் விளையாடவுள்ளது.
இந்த போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். இது அந்த அணிக்கு சிறிது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய லாகி பர்குசன் இந்த போட்டியில் விளையாடுகிறார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டியில் களமிறங்குகிறார்.