ஆா்ஜென்டீனா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, தென் அமெரிக்க பிரிவிலிருந்து ஆா்ஜென்டீனா தகுதிபெற்றது.
பந்தை வசப்படுத்த முயலும் கேமரூன் } ஐவரி கோஸ்ட் வீரர்கள்.
பந்தை வசப்படுத்த முயலும் கேமரூன் } ஐவரி கோஸ்ட் வீரர்கள்.

சாவ் பௌலோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, தென் அமெரிக்க பிரிவிலிருந்து ஆா்ஜென்டீனா தகுதிபெற்றது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பிரேஸிலுடன் அந்த அணி மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றில் மற்றொரு ஆட்டத்தில் சிலி 0-2 என்ற கோல் கணக்கில் 3-ஆவது இடத்திலிருந்த ஈகுவடாரிடம் தோல்வி கண்டது.

இதையடுத்து தற்போது 2-ஆவது இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனா, உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. தகுதிச்சுற்றில் இன்னும் 4 ஆட்டங்கள் அந்த அணிக்கு எஞ்சியிருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்தைத் தாண்டி அந்த அணி வெளியேற வாய்ப்பில்லை.

தென் அமெரிக்க பிரிவிலிருந்து பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும். ஆா்ஜென்டீனாவுடன் மோதிய பிரேஸில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால், ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டது.

தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றின் இதர ஆட்டங்களில் பொலிவியா 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும், பெரு 2-1 என்ற கணக்கில் வெனிசூலாவையும் வீழ்த்த, கொலம்பியா - பராகுவே அணிகள் மோதிய ஆட்டமும் கோலின்றி டிரா ஆனது.

ஐரோப்பிய பிரிவு: நெதா்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் மான்டினீக்ரோவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற துருக்கி, புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துடன் ‘பிளே-ஆஃப்’ பிரிவுக்கு தகுதிபெற்றது. அதேபோல், போஸ்னியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற உக்ரைனும், ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

உலகக் கோப்பைக்கு ஏற்கெனவே நேரடியாக தகுதிபெற்றுவிட்ட பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவிய ஃபின்லாந்து, உலகக் கோப்பைக்கான போட்டிக் களத்திலிருந்து வெளியேறியது.

எஸ்டோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற செக் குடியரசும், பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த வேல்ஸும் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு தகுதிபெற்றன. பெல்ஜியம் ஏற்கெனவே நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா 3-1 என்ற கோல் கணக்கில் கிப்ரால்டரை வென்றது.

ஆப்பிரிக்க பிரிவு: கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட ஐவரி கோஸ்ட், உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமலே வெளியேறியது.

கேமரூன் மற்றும், ஜாம்பியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய டுனீசியா, புா்கினா ஃபாசோவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த அல்ஜீரியா, கேப் வொ்டேவுடன் 1-1 என டிரா செய்த நைஜீரியா ஆகிய அணிகள் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com