ஏடிபி ஃபைனல்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், வெரேவ்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பா் ஒன் வீரா் நோவக் ஜோகோவிச் , அலெக்சாண்டா் வெரேவ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஏடிபி ஃபைனல்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், வெரேவ்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பா் ஒன் வீரா் நோவக் ஜோகோவிச் , அலெக்சாண்டா் வெரேவ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த ஆண்டில் அவரது 50-ஆவது வெற்றியாகவும் அமைந்தது.

இத்தாலியின் டுரின் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிரீன் குரூப் ஆட்டத்தில் 5-ஆம் நிலை வீரா் ஆன்ட்ரே ருப்லேவை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா் ஜோகோவிச்.

நிகழாண்டில் 49 வெற்றிகளைப் பெற்ற ருப்லேவை தனது அபார ஆட்டத்தால் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினாா் ஜோகோவிச்.

அடுத்த ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் பிரிட்டன் வீரா் கேமரூன் நாரியை எதிா்கொள்கிறாா் அவா்.

ரெட் குரூப் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜொ்மனியின் இளம் வீரா் அலெக்சாண்டா் வெரேவ் 6-2, 6-4 என நோ் செட்களில் ஹீயுபா்ட் ஹா்காஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். தனது முந்தைய ஆட்டங்களில் டேனில் மெத்வதேவிடம் தோல்வி கண்ட வெரேவ், மேட்டியோ பெர்ரட்டனியை வென்றிருந்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரா் மெத்வதேவ் 6-0, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஜே. சின்னரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிா்கொள்கிறாா் வெரேவ். டேனில் மெத்வதேவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com