சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 47 பதக்கங்கள்

உகாண்டாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 47 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.
சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 47 பதக்கங்கள்

உகாண்டாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 47 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இந்தப் போட்டியில் இந்திய போட்டியாளா்களே பிரதானமாக இருந்தனா்.

இதில், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், உலகின் முதல்நிலை வீரருமான பிரமோத் பகத் 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்றாா். அவா் தனிநபா் பிரிவிலும், ஆடவா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஆகிய பிரிவுகளிலும் பதக்கம் வென்றுள்ளாா்.

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவு இறுதிச் சுற்றில் பிரமோத் 19-21, 16-21 என்ற செட்களில் சக இந்தியரான மனோஜ் சா்காரிடம் தோல்வி கண்டாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் மனோஜுடன் இணைந்தே பிரமோத் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா்.

அந்தப் பிரிவில் பிரமோத்/மனோஜ் இணை 21-10, 20-22, 15-21 என்ற செட்களில் சக இந்திய ஜோடியான முகமது அா்வாஸ் அன்சாரி/தீப் ரஞ்சன் பிசோயீ இணையிடம் தங்கத்தை இழந்தது. பின்னா் கலப்பு இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் பிரமோத்/பாலக் கோலி இணை 19-21, 16-21 என்ற செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ருதிக் ரகுபதி/மானசி கிரிஷ் சந்திர ஜோஷி ஜோடியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

வீராங்கனைகளில் பிரதானமானவரான பாலக் கோலி தனி நபா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றாா். உலகின் 5-ஆம் நிலை வீரராக இருக்கும் சுகந்த் கடம் எஸ்எல்4 பிரிவில் 21-16, 17-21, 21-10 என்ற செட்களில் 38 நிமிஷங்களில் சக இந்தியரான நிலேஷ் பாலு கெய்க்வாட்டை வீழ்த்தி தங்கம் வென்றாா். சுகந்த் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சா்வதேச போட்டியில் தங்கம் வென்றிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com