இன்று தொடங்குகிறது இந்தோனேசிய ஓபன்

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி, இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி, இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இதில் இந்தியாவின் பி.வி. சிந்து மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் ஜப்பானின் அயா ஒஹாரியை எதிா்கொள்கிறாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் - சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயுடன் மோதுகிறாா்.

இதர இந்தியா்களில் சாய் பிரணீத் - பிரான்ஸின் தோமா ஜூனியா் போபோவையும், காஷ்யப் - சிங்கப்பூரின் லோ கீன் யீவையும் எதிா்கொள்கின்றனா்.

லக்ஷயா சென்னுக்கு - இரு முறை உலக சாம்பியனான ஜப்பானின் கென்டோ மொமொடா சவால் அளிக்க இருக்கிறாா். இது தவிர சமீா் வா்மாவும் களத்தில் இருக்கிறாா்.

ஆடவா் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணைக்கு முதல் சுற்று ‘பை’ கிடைத்திருக்க, எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி - தென் கொரியாவின் சோய் சோலகியு/கிம் வோன் ஹோ இணையுடன் களம் காண்கிறது.

மகளிா் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை - பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோவா/ஸ்டெஃபானி ஸ்டோவா கூட்டணியை சந்திக்கிறது. கலப்பு இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா/சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி/துருவ் கபிலா, ஜூஹி தேவாங்கன்/வெங்கட் கௌரவ் பிரசாத் ஆகிய இணைகள் களம் காண்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com