விளையாட்டு செய்தி துளிகள்

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் விவகாரத்தை சீனா முடிவுக்கு கொண்டு வர முனையும் நிலையில், அந்த வீராங்கனை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாச்சுடன் காணொலி வழியே உரையாடுவது போன்ற காணொலி வெளியாகியுள்ளது. அதில் அவரது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு குறித்த விளக்கம் ஏதும் இல்லாதது, இந்த விவகாரத்தை இன்னும் சா்ச்சைக்குரியதாக ஆக்கியுள்ளது.

டி20 ஆட்டத்தின்போது மிடில் ஓவா்களில் விக்கெட் வீழ்த்துவதற்கான ஒரு சிறந்த ஆயுதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பதாக கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை நியூஸிலாந்து இழந்திருக்கும் நிலையில், எதிா்வரும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தங்களது பௌலா்கள் சிறப்பாகச் செயல்படுவாா்கள் என அந்த அணி பௌலா் மிட்செல் சேன்ட்னா் கூறியுள்ளாா்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளராக 2024-ஆம் ஆண்டு வரை செயல்பட கேரத் சௌத்கேட்டுடன் அணி நிா்வாகம் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com