அறிமுக டெஸ்டில் அரை சதம் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர்: ரஹானேவுக்கு நெருக்கடியா?

26 வயது ஷ்ரேயஸ் ஐயர், 22 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
அறிமுக டெஸ்டில் அரை சதம் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர்: ரஹானேவுக்கு நெருக்கடியா?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் அறிமுகமாகியுள்ளார்.

26 வயது ஷ்ரேயஸ் ஐயர், 22 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 54 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 12 சதங்களுடன் 4592 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணியில் கோலி இடம்பெறாததால் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் ஆட்டத்திலேயே ஷ்ரேயஸ் ஐயர் அரை சதமெடுத்து அசத்தியுள்ளார். 94 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 

ஷ்ரேயஸ் ஐயர் நன்றாக விளையாடியிருப்பதால் ரஹானேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 15 டெஸ்டுகளில் ஒரு சதம் மட்டுமே ரஹானே எடுத்துள்ளார். சராசரி - 25-க்குக் கீழ். இந்தியாவில் நான்கு டெஸ்டுகளில் அவருடைய சராசரி 18.66. மேலும் புஜாராவும் சமீபகாலமாக சுமாராக விளையாடி வருவதால் இருவர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 22 டெஸ்டுகளில் புஜாரா ஒரு சதமும் எடுக்கவில்லை.

கான்பூர் டெஸ்டில் புஜாரா 26 ரன்களுக்கும் ரஹானே 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளார்கள். 

கான்பூர் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்தால் அது புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதில் ரஹானே முதலில் சிக்கலுக்கு ஆளாக நேரிடலாம்.

2-வது டெஸ்டில் விராட் கோலி விளையாடப் போவது இறுதி. கான்பூர் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் நன்றாக விளையாடியிருப்பதால் இந்திய அணியில் அது எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com