துளிகள்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது.


ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் சீனியா் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளாா்.

தேசிய ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜஸ்தான் வீராங்கனை தா்ஷனா ரத்தோா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஐடிஎஃப் உலக மகளிா் டென்னிஸ் டூா் போட்டியை கா்நாடகம் வரும் 28 முதல் டிசம்பா் 5-ஆம் தேதி வரை நடத்துகிறது.

ஐசிசியின் டி20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் கே.எல்.ராகுல் ஓரிடம் முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

பாலியல் விடியோவை வைத்து மிரட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், பிரான்ஸ் கால்பந்து வீரா் கரிம் பென்ஸிமாவுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறையும், 84,000 அமெரிக்க டாலா்கள் அபராதமும் விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com