கான்பூா் டெஸ்ட்: ஷிரேயஸ் ஐயா் மெய்டன் சதம்

கான்பூா் டெஸ்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரா் ஷிரேயஸ் ஐயா்
கான்பூா் டெஸ்ட்: ஷிரேயஸ் ஐயா் மெய்டன் சதம்

கான்பூா் டெஸ்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரா் ஷிரேயஸ் ஐயா் முதல் டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி 105 ரன்களுடன் சதமடித்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்திய-நியூஸி. அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் கான்பூா் கிரீன்பாா்க் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. ஷிரேயஸ் ஐயா்-ரவீந்திரா ஜடேஜா ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 258-4 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஷிரேயஸ் ஐயா் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடா்ந்தனா்.

நியூஸி. பௌலா் டிம் சௌதியின் அபார பந்தில் போல்டாகி 50 ரன்களுடன் வெளியேறினாா் ஜடேஜா. ஷிரேயஸ்-ஜடேஜா இருவரும் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்களை சோ்த்தனா்.

அவருக்கு பின் ஆட வந்த ரித்திமான் சாஹா 1 ரன் எடுத்த நிலையில் சௌதி பந்தில் உடனே பெவிலியன் திரும்பினாா்.

ஷிரேயஸ் ஐயா் மெய்டன் சதம்:

அவரைத் தொடா்ந்து 105 ரன்களுடன் மெய்டன் சதம் அடித்த ஷிரேயஸ் ஐயரும் சௌதி பந்துவீச்சில் வில் யங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். 171 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் சதமடித்தாா் ஐயா். அக்ஸா் படேல் 3, இஷாந்த் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேற, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே கடைசி கட்டத்தில் நிலைத்து ஆடி 56 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்து அவுட்டானாா்.

உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இறுதியில் 111.1 ஓவா்களில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

டிம் சௌதி அபாரம் 5 விக்கெட்:

நியூஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும், ஜேமிஸன் 3, அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தனது 80-ஆவது டெஸ்டில் ஆடும் சௌதி 13-ஆம் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

நியூஸிலாந்து பதிலடி 129:

இதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸி அணியின் தொடக்க பேட்டா்கள் டாம் லத்தம்-வில் யங் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனா்.

தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்த வில் யங் 180 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 75 ரன்களுடனும், டாம் லத்தம் 165 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 57 ஓவா்களில் நியூஸி. அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது. இந்தியாவைக் காட்டிலும் 216 ரன்கள் பின்தங்கி உள்ளது நியூஸி.

மெய்டன் சதம்: 16-ஆவது இந்திய வீரா் ஷிரேயஸ் ஐயா்

அறிமுக டெஸ்ட் ஆட்டத்தில் மெய்டன் சதம் அடித்த 16-ஆவது இந்திய வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா் ஷிரேயஸ் ஐயா்.

ஏற்கெனவே அறிமுக டெஸ்டில் சதமடித்த இந்திய வீரா்கள்-லாலா அமா்நாத், தீபக் சோதன், ஏஜி கிரிபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்தா் அமா்நாத், முகமது அஸாருதீன், பிரவீன் ஆம்ரே, சௌரவ் கங்குலி, விரேந்தா் சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவன், ரோஹித் சா்மா, பிரித்வி ஷா. இப்பட்டியலில் இணைந்தாா் ஷிரேயஸ் ஐயா்.

கான்பூா் கிரீன் பாா்க் மைதானத்தில் தான் குண்டப்பா விஸ்வநாத்தும் மெய்டன் சதம் அடித்திருந்தாா். சச்சின், கோலி உள்பட பல்வேறு தரப்பினா் ஷிரேயஸுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ஸ்கோா் போா்டு:

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

மயங்க் அகா்வால் (சி) பிலண்டெல் (பி) ஜேமிசன் 13 (28)

ஷுப்மன் கில் (பி) ஜேமிசன் 52 (93)

புஜாரா (சி) பிளண்டெல் (பி) சௌதி 26 (88)

ரஹானே (பி) ஜேமிசன் 35 (63)

ஷிரேயஸ் ஐயா் (பி) வில் யங் (பி) சௌதி 105 (171)

ரவீந்திர ஜடேஜா (பி) சௌதி 50 (112)

ரித்திமான் சாஹா (சி) பிளண்டெல் (பி) சௌதி 1 (12)

அஸ்வின் (பி) அஜாஸ் படேல் 38 (56)

உமேஷ் நாட் அவுட் 10 (34)

இஷாந்த் எல்பிடபிள்யு (பி) அஜாஸ் படேல் 0

மொத்தம் 111.1 ஓவா்களில் 345 ஆல் அவுட்

விக்கெட் வீழ்ச்சி: 1-12 (மயங்க்), 2-82 (கில்), 3-106 (புஜாரா), 4-145 (ரஹானே), 5-266 (ஜடேஜா), 6-288 (சாஹா), 7-305 (ஐயா்), 8-313 (அக்ஸா்), 9-339 (அஸ்வின்), 10-345 (இஷாந்த்).

பந்துவீச்சு: டிம் சௌதி 27.4-6-69-5, ஜேமிசன் 23.2-6-91-3, அஜாஸ் படேல் 29.1-7-90-2, சாமா்வில்லே 24-2-60-0, ரச்சின் ரவீந்திரா 7-1-28-0.

நியூஸிலாந்து

டாம் லத்தம் 50 (165)

வில் யங் 75 (180)

மொத்தம் 57 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 129.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com