முகப்பு விளையாட்டு செய்திகள்
‘அற்புதமான நாடு இந்தியா’: முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் புகழாரம்
By DIN | Published On : 30th November 2021 08:34 PM | Last Updated : 30th November 2021 08:35 PM | அ+அ அ- |

கெவின் பீட்டர்சன்
ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவ முன்வந்ததைக் குறிப்பிட்டு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | நாளை (டிச.1) அதிமுக செயற்குழுக் கூட்டம்
இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள், உயிா்காக்கும் மருந்துகள், பரிசோதனைக் கருவிகளை அளித்து உதவத் தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
That caring spirit once again shown by India!
The most fabulous country with so many warm hearted people!
Thank you!
cc @narendramodi