துளிகள்...

* வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பாகிஸ்தான் வசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால், கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அந்த அணி வெற்றி பெறும் எனத் தெரிகிறது. அந்த அணி இன்னும் 93 ரன்களே எடுக்க வேண்டியுள்ளது.

* மோசமான வானிலை காரணமாக இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை அணி 34.4 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

* 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எஃப்ஐஹெச் ஆடவா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவின் சோனியா பத்லா தொழில்நுட்ப அதிகாரியாகவும், பிபு கல்யாண் நாயக் மருத்துவ அதிகாரியாகவும், ரகு பிரசாத், ஜாவத் ஷேக் நடுவா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

* தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பஞ்சாபின் அா்ஜூன் சிங் சீமா/அா்ஷ்தீப் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது.

* மான்செஸ்டா் யுனைடெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரால்ஃப் ராங்னிக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

* பிடபிள்யூஎஃப் உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை தகுதிபெற்றுள்ளது.

* மீகோ எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோடாக்ஸ் மேக்ஸ் கிளாஸில் ஐக்கிய அரபு அமீரக வீரா் கைல் குமரன் சாம்பியன் ஆனாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com