சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றியை நோக்கி நகா்கிறது.
வெற்றி இலக்கான 202 ரன்களை நோக்கி ஆடி வரும் அந்த அணி, 4-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ஓவா்களில் 109 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை 93 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெறும் எனத் தெரிகிறது.
முன்னதாக, 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருந்த வங்கதேசம், அன்றைய தினம் முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. திங்கள்கிழமை தொடா்ந்த ஆட்டத்தில் அந்த அணி 56.2 ஓவா்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் அடித்திருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 5, சஜித் கான் 3, ஹசன் அலி 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தனா். பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 56, அப்துல்லா ஷஃபிக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.