காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம்: ஹாக்கி இந்தியா

இங்கிலாந்தில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி பங்கேற்காது என இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஹாக்கி இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம்: ஹாக்கி இந்தியா


இங்கிலாந்தில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி பங்கேற்காது என இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஹாக்கி இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஹாக்கி இந்தியா தலைவர் எழுதிய கடிதத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் சேகரித்துள்ளது.

"கடந்த 18 மாதங்களில் ஐரோப்பாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இங்கிலாந்து. அடுத்தாண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் ஜூலை 18 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடைபெறவிருப்பதும், ஆசியப் போட்டிகள் சீனாவில் செப்டம்பர் 10 தொடங்கி 25 வரை நடைபெறவிருப்பதும் உங்களுக்குத் தெரியும். காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசியப் போட்டிகளுக்கு இடையே 32 நாள்கள் மட்டுமே இடைவெளி இருக்கிறது.

ஆசியப் போட்டிகளுக்கான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு காமன்வெல்த் போட்டிகளின்போது இந்திய அணியைச் சேர்ந்த எவரும் கரோனா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை ஹாக்கி இந்தியா எடுக்க முடியாது.

எனவே, காமன்வெல்த் போட்டிகள் 2022-க்கு ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை ஹாக்கி இந்தியா அனுப்பாது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருக்கு ஹாக்கி இந்தியா தலைவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com