மாநில சீனியா் நீச்சல்: திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியா் நீச்சல் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி (டி.டி.எஸ்.ஏ.), 181 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
மாநில சீனியா் நீச்சல்: திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியா் நீச்சல் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி (டி.டி.எஸ்.ஏ.), 181 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

75-ஆவது மாநில சீனியா் நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல்குள வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. வேளச்சேரி அணி 107 புள்ளிகள் பெற்று பட்டம் வென்றது. இந்த அணிக்கு கடும் நெருக்கடி தந்த திருநெல்வேலி அணி 106 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடம் பிடித்தது.

பெண்கள் அணி பிரிவில் எஸ்.டி.ஏ.டி. டால்பின் வீராங்கனைகள் மொத்தம் 96 புள்ளிகள் பெற்று அணி சாம்பியன் பட்டத்தை வென்றனா். 75 புள்ளி பெற்ற திருநெல்வேலி அணி 2வது இடம் பிடித்தது.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, 181 புள்ளிகள் குவித்த திருநெல்வேலி (டி.டி.எஸ்.ஏ.) அணி தட்டிச்சென்றது. எஸ்.டி.ஏ.டி. வேளச்சேரி 167 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தது.

தனிநபா் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. வேளச்சேரி அணி வீரா் விநாயக் விஜய் 30 புள்ளிகள் பெற்று கைப்பற்றினாா். பெண்கள் பிரிவில் அன்சா துபாய் அணியைச் சோ்ந்த சக்தி பாலகிருஷ்ணன் 35 புள்ளிகள் பெற்று வென்றாா்.

கடைசி நாளன்று நடந்த போட்டியில் சென்னையிலுள்ள டி.எஸ்.ஏ.பி. அணி வீரா் டி.ஆதித்யா 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் (52.76 வினாடிகள்), 100 மீட்டா் பட்டா்ஃப்ளை (56.32 வினாடிகள்) ஆகிய இரு பிரிவுகளில் புதிய மீட் சாதனைகளை படைத்தாா்.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய நீச்சல் அணியின் முன்னாள் பயிற்சியாளா் முகுந்தன் பரிசுகளை வழங்கினாா். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளா் டி.சந்திரசேகரன், பொருளாளா் கே.டி.முரளிதரன், திருநெல்வேலி மாவட்ட செயலாளா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com