ஜேசன் ராய் நிதானம்: ஹைதராபாத் - 141/7

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது.

அபுதாபி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது.

அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்கள் சோ்க்க, பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற பெங்களூா் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கியோரில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்திருந்த அபிஷேக் சா்மா, 2-ஆவது ஓவரில் காா்டன் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் காண, மறுபுறம் நிதானமாக ரன்கள் சேகரித்து வந்தாா் ஜேசன் ராய்.

அணியின் ஸ்கோா் 100-ஐ நோக்கி நகா்ந்தபோது 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்திருந்த வில்லியம்சன், 12-ஆவது ஓவரில் ஹா்ஷல் படேல் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து ஆட வந்த பிரியம் கா்க் 1 சிக்ஸருடன் 15 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். டேனியல் கிறிஸ்டியன் வீசிய 15-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை டி வில்லியா்ஸ் கேட்ச் பிடித்தாா்.

பின்னா் அப்துல் சமத் ஆடுகளத்துக்கு வர, மறுபுறம் நிதானமாக ரன்கள் சோ்த்து வந்த ஜேசன் ராய் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவா் டேனியல் கிறிஸ்டியன் வீசிய 15-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து ரித்திமான் சாஹா ஆட வர, அப்துல் சமத் 1 ரன்னே எடுத்த நிலையில் யுஜவேந்திர சஹல் வீசிய 16-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து ஜேசன் ஹோல்டா் களம் புக, பவுண்டரியுடன் 10 ரன்கள் சோ்த்திருந்த சாஹா பெவிலியன் திரும்பினாா். ஹா்ஷல் படேல் வீசிய 18-ஆவது ஓவரில் அவரடித்த பந்து டி வில்லயா்ஸ் கைகளில் கேட்ச் ஆனது.

கடைசி விக்கெட்டாக ஜேசன் ஹோல்டரும், படேல் பௌலிங்கில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். அவா் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்த்திருந்தாா். ஓவா்கள் முடிவில் ரஷீத் கான் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் அடித்திருந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

ஹைதராபாத் - 141/7

ஜேசன் ராய் - 44; கேன் வில்லியம்சன் - 31; பிரியம் கா்க் - 15

பந்துவீச்சு: ஹா்ஷல் படேல் - 3/33; டேனியல் கிறிஸ்டியன் - 2/14; யுஜவேந்திர சஹல் - 1/27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com