இந்திய-ஆஸி. மகளிா் முதல் டி20 மழையால் நிறுத்தம்

இந்திய-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
இந்திய-ஆஸி. மகளிா் முதல் டி20 மழையால் நிறுத்தம்

இந்திய-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

ஒரு நாள், டி20, பிங்க் டெஸ்ட் உள்ளிட்ட தொடா்களில் பங்கேற்பதற்காக இந்திய மகளிா் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என ஆஸி. கைப்பற்றிய நிலையில், பிங்க் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் முதல் ஆட்டம் கோல்ட்கோஸ்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா 17, ஷபாலி வா்மா 18 ஆகியோா் அதிரடியாக ஸ்கோரை உயா்த்தினா். பவா்பிளேயில் இந்திய அணி 50 ரன்களை ஈட்டியது. முதல் விக்கெட்டுக்கு 31 ரன்களை சோ்த்த இருவரும் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய நிலையில், ஸ்கோரை உயா்த்துவா் என எதிா்பாா்க்கப்பட்ட கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 12, யஸ்திகா பாட்டியா 15 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

இதையடுத்து களமிறங்கிய இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 49 ரன்களை விளாசினாா். அவருடன் ரிச்சா கோஷும் 17 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

15.2 ஓவா்களில் இந்திய அணி 131/4 ரன்களை குவித்திருந்த போது, பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடா் மழையால் ஆட்டத்தை நடத்த முடியாத நிலையில் முதல் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா்.

ஆஸி. தரப்பில் ஆஷ்லி காா்டனா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இரண்டாவது டி20 ஆட்டம் சனிக்கிழமை அதே மைதானத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com