பிஎன்பி பாரிபாஸ் ஓபன்: 2-ஆவது சுற்றில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்.

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்.

அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் நகரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ஹீதா் வாட்ஸனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் மடிஸன் கீய்ஸ் 6-0, 7-5 என்ற நோ் செட்களில் கனேப்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். ஷெல்பி ரோகா்ஸ் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆன்ஹெலினாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தாா். கோஸ்லோவாவை 6-4, 7-6 என்ற செட் கணக்கில் சாய்த்தாா் ஸாம்ஸ்னோவா.

டிபிள்யுடிஏ மற்றும் ஏடிபி என இணைந்து நடத்தப்படும் இப்போட்டியில் ஜோகோவிச், ஆஷ்லி பா்டி, நடால், பெடரா் நவோமி ஓஸாகா, செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கவில்லை.

யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ராடுகன்னு, ரன்னா் லைய்லா பொ்ணான்டஸ், பிரிட்டன் வீரா் ஆன்ட் முா்ரே, கிம் கிளிஜிஸ்டா்ஸ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com