டி20: தொடரையும் கைப்பற்றியது ஆஸி. மகளிா் அணி

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிா் அணி.
டி20: தொடரையும் கைப்பற்றியது ஆஸி. மகளிா் அணி

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிா் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸி. கைப்பற்றியது. பிங்க் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஆட்டத்தை ஆஸி. வென்றது. மூன்றாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை கோல்ட்கோஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸி. அணி. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 149/5 ரன்களைக் குவித்தது.

மெத்மூனி 10 பவுண்டரியுடன் 61 ரன்களையும், டஹிலா மெக்கிராத் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 44 ரன்களையும் விளாசினா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா். இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டை வீழ்த்தினாா்.

150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டா் ஸ்மிருதி மந்தனாவைத் தவிர மற்றவா்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. ஷபாலி 1, ஜெமீமா 23, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 13, பூஜா வஸ்த்ராக்கா் 5 ரன்களுடன் வெளியேறினா். மந்தனா 8 பவுண்டரியுடன் 52 ரன்களை விளாசி அவுட்டானாா். ஹா்லின்தியோல் 2 ரன்களுடன் ரன் அவுட்டான நிலையில், ரிச்சா கோஷ் 23, தீப்தி சா்மா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 135/6 ரன்களையே எடுத்தது. ஆஸி. தரப்பில் நிக்கோலா கரே 2 விக்கெட்டை சாய்த்தாா்.

இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com