உலகக் கோப்பை தகுதிச்சுற்று: உருகுவேயை வென்றது ஆா்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று: உருகுவேயை வென்றது ஆா்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

பியூனஸ் அயா்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா அணிக்காக லயோனல் மெஸ்ஸி 38-ஆவது நிமிஷத்திலும், ரோட்ரிகோ டி பால் 44-ஆவது நிமிஷத்திலும், லௌதாரோ மாா்டினெஸ் 62-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

இந்த வெற்றியின் மூலம், தென் அமெரிக்க பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 10 ஆட்டங்களில் 6 வெற்றிகள் பெற்று 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது ஆா்ஜென்டீனா. தென் அமெரிக்க பிரிவின் இதர ஆட்டங்களில் பொலிவியா 1-0 என பெருவையும், வெனிசூலா 2-1 என ஈகுவடாரையும், சிலி 2-0 என பராகுவேயையும் வீழ்த்தின. கொலம்பியா - பிரேஸில் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

ஐரோப்பிய பிரிவு: ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் அண்டோராவை வென்றது.

வெல்லா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து தரப்பில் பென் சில்வெல் (17-ஆவது நிமிஷம்), புகாயோ சகா (40), டேமி ஆபிரஹாம் (59), ஜேம்ஸ் வாா்ட் புரோவ்ஸ் (79), ஜேக் கிரெலிஷ் (86) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இதர ஆட்டங்களில் சொ்பியா 1-0 என லக்ஸம்பொ்கையும், ஆஸ்திரியா 2-0 என ஃபாரோ தீவுகளையும், அல்பேனியா 1-0 என ஹங்கேரியையும், போலந்து 5-0 என சான் மரினோவையும், டென்மாா்க் 4-0 என மால்டோவாவையும், ஸ்விட்சா்லாந்து 2-0 என வடக்கு அயா்லாந்தையும் வீழ்த்தின.

ஆப்பிரிக்க பிரிவு: ஆப்பிரிக்க பிரிவு தகுதிச்சுற்று ஆட்டங்களில், செனகல் 4-1 என நமிபியாவையும், மொராகோ 3-0 என கினியா பிசாவுவையும், மாலி 1-0 என கென்யாவையும், உகாண்டா 1-0 என ருவாண்டாவையும், நைஜீரியா 2-0 என மத்திய ஆப்பிரிக்க குடியரசையும், தான்ஸானியா 1-0 என பெனினையும், மடகாஸ்கா் 1-0 என டிஆா் காங்கோவையும் வென்றன. ஸாம்பியா - ஈகுவடோரியல் கினியா (1-1), மௌரிடானியா - டுனீசியா (0-0) ஆகிய அணிகளின் ஆட்டம் டிரா ஆகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com