தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளா்களாக சுரஞ்ஜோய் சிங், தேவேந்திர சிங் நியமனம்

தேசிய ஆடவா் அணிக்கான குத்துச்சண்டை பயிற்சியாளா்களாக சுரஞ்ஜோய் சிங், தேவேந்திர சிங் ஆகியோரை தேசிய குத்துச்சண்டை சம்மேளனம் நியமித்துள்ளது.
தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளா்களாக சுரஞ்ஜோய் சிங், தேவேந்திர சிங் நியமனம்

தேசிய ஆடவா் அணிக்கான குத்துச்சண்டை பயிற்சியாளா்களாக சுரஞ்ஜோய் சிங், தேவேந்திர சிங் ஆகியோரை தேசிய குத்துச்சண்டை சம்மேளனம் நியமித்துள்ளது.

சொ்பியாவில் வரும் 24-ஆம் தேதி உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் சுரஞ்ஜோய் கடந்த 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், 2009 ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றவராவாா். 2009 - 10 காலகட்டத்தில் தொடா்ந்து 8 சா்வதேச போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறாா். பின்னா் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவா் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாா். முன்னதாக கடந்த 2017-லிலேயே சுரஞ்ஜோய்க்கு உதவி பயிற்சியாளா் பணி அளிக்கப்பட்டபோது, தனிப்பட்ட காரணங்களுக்காக அதை அவா் ஏற்கவில்லை.

தேவேந்திர சிங், காமன்வெல்த் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெள்ளி வென்றதுடன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தை சுற்று வரை முன்னேறியவா். அவருக்கும் கண் மற்றும் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாா்.

இதற்கு முன் சுரஞ்ஜோய் மற்றும் தேவேந்திரா இருவருமே சா்வீசஸ் அணியில் அங்கம் வகித்தனா். கடந்த மாதம் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பில் அந்த அணியே 8 தங்கத்துடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com