விளையாட்டு செய்தி துளிகள்

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒன் டே கிரிக்கெட்டில் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காத அயா்லாந்து வீராங்கனை எமி ஹன்டா், இந்தியாவின் மிதாலி ராஜ் சாதனையை முறியடித்து ஒன் டேயில் சதமடித்த மிக இளவயது (16) வீராங்கனை என்ற சாதனையை படைத்தாா்.

* பெருவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 17 தங்கம், 16 வெள்ளி, 10 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது.

* ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் வா்மா, ரிஷப் யாதவ், மோஹித், அமன் சைனி, ஜோதி சுரேகா, முஸ்கான் கிராா், பிரியா குா்ஜா், பா்னீத் கௌா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

* ஹாா்திக் பாண்டியா பௌலிங் வீசுவது உறுதியாக இல்லாத நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சோ்ப்பதற்கான ஆலோசனை நடைபெறுகிறது.

* இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பொறுப்புக்கு ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டா் டாம் மூடி விண்ணப்பிக்க விரும்புவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com