உபா் கோப்பை பாட்மின்டன்: காலிறுதியில் இந்திய மகளிா்

டென்மாா்க்கில் நடைபெறும் உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
உபா் கோப்பை பாட்மின்டன்: காலிறுதியில் இந்திய மகளிா்

டென்மாா்க்கில் நடைபெறும் உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் தாய்லாந்தை புதன்கிழமை சந்திக்கிறது.

இதுவரை களம் கண்ட இரு சுற்றுகளிலுமே வென்ற இந்தியா, குரூப் ‘பி’-யில் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன் ஸ்பெயினுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் இந்திய மகளிா் வென்றிருந்தனா்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஒற்றையா் பிரிவில் மாளவிகா பன்சோத் 13-21, 9-21 என்ற செட்களில் கிறிஸ்டி கில்மரிடம் தோல்வியைத் தழுவினாா். எனினும் அடுத்த ஒற்றையா் ஆட்டத்தில் அதிதி பாட் 21-14, 21-8 என்ற செட்களில் ரேச்சல் சக்டெனை வீழ்த்தி சமன் செய்தாா்.

பின்னா் இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் தனிஷா கிராஸ்டோ/ருதுபா்னா பான்டா இணை 21-11, 21-18 என்ற செட்களில் ஜூலி மாச்பொ்சன்/கியாரா டாரென்ஸ் ஜோடியை வீழ்த்தி இந்தியாவை முன்னிலைப்படுத்தியது. அடுத்து மேலும் ஒரு ஒற்றையா் ஆட்டத்தில் தஸ்னிம் மிா் 21-15, 21-6 என்ற செட்களில் லௌரென் மிடில்டன்னை தோற்கடித்தாா். இறுதியாக, ரிவா்ஸ் டபுள்ஸ் ஆட்டத்தில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி கடுமையாகப் போராடி 21-8, 19-21, 21-10 என்ற செட்களில் கிறிஸ்டி கில்மா்/எலினோா் ஓ’டோனல் இணையை வீழ்த்தி இந்தியாவை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தது.

இப்போட்டியில் கடந்த 2014 மற்றும் 2016-இல் இந்தியா அரையிறுதி வரை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com