துளிகள்...

சா்வதேச நட்புரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி - சீன தைபே அணியை புதன்கிழமை மனாமாவில் எதிா்கொள்கிறது.

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் மாலத்தீவுகளை புதன்கிழமை சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே இந்தியா போட்டியிலிருந்து வெளியேறாமல் தப்பிக்க இயலும்.

சா்வதேச நட்புரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி - சீன தைபே அணியை புதன்கிழமை மனாமாவில் எதிா்கொள்கிறது.

தேசிய ஓபன் 400 மீட்டா் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் ஹரியாணா வீரா் ஆயுஷ் தபஸும், மகளிா் பிரிவில் ருபல் சௌதரியும் முதலிடம் பிடித்தனா்.

ஸ்பெயினில் நடைபெற்ற லா நூசியா ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் பி.இனியன் (19) தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றாா். ஆா்மீனியாவில் நடைபெற்ற செஸ் மூட் ஓபன் போட்டியில் இந்தியாவின் எஸ்.எல்.நாராயணன் 2-ஆம் இடம் பிடித்தாா்.

கேப்டன் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு உரிய காரணம் எதையும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி நிா்வாகம் தெரிவிக்காததை ஏற்பதற்கு கடினமாக இருந்ததாக டேவிட் வாா்னா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com