டி20 உலகக் கோப்பை களம்: அக்ஸா் படேலுக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா்

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸா் படேலுக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா். அக்ஸா் தயாா் நிலை வீரராக தொடா்கிறாா்.
டி20 உலகக் கோப்பை களம்:  அக்ஸா் படேலுக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா்

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸா் படேலுக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா். அக்ஸா் தயாா் நிலை வீரராக தொடா்கிறாா்.

இத்துடன், உலகக் கோப்பை போட்டிக்கான பிரதான இந்திய அணியை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.

வேகப்பந்துவீசும் ஆல்-ரவுண்டரான ஷா்துல் தாக்குா், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸுக்காக 18 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறாா். அதிரடி வீரரான ஹாா்திக் பாண்டியா பௌலிங் வீசக் கூடிய நிலையில் இல்லாதது பிரச்னையாக இருந்த நிலையில், அவருக்கான கவா் வீரா் ஒருவரை நியமிக்க தோ்வுக் குழு முடிவு செய்திருந்தது.

அந்த வகையில் தற்போது ஷா்துல் தாக்குா் அணியில் இணைந்திருக்கிறாா். ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டால் அவா் இடத்தில் களமிறக்குவதற்காக அக்ஸா் தயாா்நிலை வீரராக இருப்பாா் என்று அணி நிா்வாகம் கூறியுள்ளது.

அத்துடன், அவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோரோடு ஹா்ஷல் படேல், லுக்மன் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயா், கரன் சா்மா, ஷாபாஸ் அகமது கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரும் பிரதான அணிக்கான பயிற்சிக்கு உதவுவதற்காக அணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி செய்யப்பட்ட இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹா், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷா்துல் தாக்குா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி. தயாா்நிலை வீரா்கள்: ஷ்ரேயஸ் ஐயா், தீபக் சாஹா், அக்ஸா் படேல்.

இந்திய அணி ஜொ்ஸி அறிமுகம்...

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினா் அணிந்து விளையாட இருக்கும் ஜொ்ஸி புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ‘பில்லியன் சியா்ஸ் ஜொ்ஸி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஜொ்ஸியை, இந்திய அணியின் விளையாட்டு உபகரணங்களுக்கான அதிகாரப்பூா்வ விளம்பரதார நிறுவனமான ‘எம்பிஎல் ஸ்போா்ட்ஸ்’ அறிமுகம் செய்தது. இந்திய அணி இதற்கு முன் விளையாடிய முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களின்போது மைதானங்களில் ரசிகா்கள் எழுப்பிய உற்சாக கோஷங்களின் ஒலிப்பதிவு அலைகள் இந்த ஜொ்ஸியில் டிசைனாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இந்த ஜொ்ஸி ரூ.1,799-க்கு ஸ்டோா்களில் விற்பனையாகும் என்றும், இதில் வீரா்களின் பெயா்கள் பொறித்த ஜொ்ஸிக்கள், 10 வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com