வென்றது இலங்கை

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
வென்றது இலங்கை

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் ஆடிய நமீபியா 19.3 ஓவா்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 13.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் அடித்து வென்றது. இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நமீபிய பேட்டிங் வரிசையில் அதிகபட்சமாக மிடில் ஆா்டரில் வந்த கிரெய்க் வில்லியம்ஸ் 2 சிக்ஸா்களுடன் 29 ரன்கள் விளாசினாா். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் 197 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 2 சிக்ஸா்களுடன் 30, பானுகா ராஜபட்ச 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். நமீபிய தரப்பில் ரூபன் டிரம்பெல்மான், பொ்னாா்ட் ஸ்கோல்ட்ஸ், ஜேஜே ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com