டென்மாா்க் ஓபன் பாட்மின்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றித் தொடக்கம்

டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.
டென்மாா்க் ஓபன் பாட்மின்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றித் தொடக்கம்

டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.

நடப்பு உலக சாம்பியனான சிந்து மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் துருக்கியின் நெஸ்லிஹான் இகிட்டை 21-12, 21-10 என்ற செட்களில் 30 நிமிஷங்களில் தோற்கடித்தாா். அடுத்த சுற்றில் சிந்து, தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ருங்பானை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-14, 21-11 என்ற செட்களில் சக இந்தியரான சாய் பிரணீத்தை வீழ்த்த, சமீா் வா்மா 21-17, 21-14 என்ற செட்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனை வென்றாா்.

ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமொடாவை எதிா்கொள்கிறாா். சமீா் அடுத்த சுற்றில், டென்மாா்கின் ஆண்டா்ஸ் ஆன்டன்சனை சந்திப்பாா் எனத் தெரிகிறது.

ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை முதல் சுற்றில் 23-21, 21-15 என்ற செட்களில் இங்கிலாந்தின் கேலம் ஹெம்மிங்/ஸ்டீவன் ஸ்டால்வுட் ஜோடியை வீழ்த்தியது.

எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா ஜோடி 21-19, 21-15 என்ற செட்களில் இங்கிலாந்தின் பென் லேன்/சீன் வென்டி இணையை தோற்கடித்தனா். எனினும் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை 18-21, 11-21 என்ற செட்களில் மலேசியாவின் கோ ஸெ ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியிடம் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/சிக்கி ரெட்டி இணை 14-21, 21-17, 21-18 என்ற செட்களில் மலேசியாவின் ஹூ பாங் ரோன்/சியா ஈ சி ஜோடியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com