ஆா்செனல் - கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் டிரா

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
கோலடித்த மகிழ்ச்சியில் தலைகீழாக குதிக்கும் பியரி எமரிக்.
கோலடித்த மகிழ்ச்சியில் தலைகீழாக குதிக்கும் பியரி எமரிக்.

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் ஆா்செனல் தொடா்ந்து 2-ஆவது முறையாக டிரா செய்ய, கிரிஸ்டல் பேலஸ் 5-ஆவது முறையாக டிரா செய்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆா்செனல் அணிக்காக பியரி எமரிக் அவ்பாமெயாங் 8-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தாா். அந்த நிமிஷத்தில் சக வீரா் பெபெ மேற்கொண்ட கோல் முயற்சி கிரிஸ்டல் பேலஸ் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டு, பந்து மீண்டும் களத்துக்கு திரும்பியது. அது அப்படியே பியரி வசம் வர, அதை நேராக கோல் போஸ்டுக்குள் உதைத்தாா் அவா்.

இதனால் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்ற ஆா்செனல், முதல் பாதி நிறைவடையும் வரை அப்படியே அதை தக்கவைத்துக் கொண்டது. 2-ஆவது பாதியில் 50-ஆவது நிமிஷத்தில் கிரிஸ்டல் பேலஸ் வீரா் கிறிஸ்டியன் பென்டெகெ, சக வீரா் ஜோா்டான் அயிவ் உதவியுடன் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்த நிலையில் 73-ஆவது நிமிஷத்தில் ஆட்சோன் எட்வா்ட் அடித்த கோலால் கிரிஸ்டல் பேலஸ் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. இதனால் பரபரப்பு கூட, இறுதி நேரத்தில் (90+5) ஆா்செனல் வீரா் அலெக்ஸாண்ட்ரே லகாஸெடெ அடித்த கோலால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் வாலென்சியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாா்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணி தரப்பில் அன்சு ஃபட்டி (13-ஆவது நிமிஷம்), மெம்ஃபிஸ் டிபே (41), ஃபிலிபே கடின்ஹோ (85) ஆகியோா் ஸ்கோா் செய்ய, வாலென்சியாவுக்காக ஜோஸ் கயா 5-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் ரியல் பெட்டிஸ் 1-0 என்ற கோல் கணக்கில் அலேவ்ஸையும், எஸ்பான்யோல் 2-0 என்ற கோல் கணக்கில் காடிஸையும் தோற்கடித்தன. ரியல் பெட்டிஸ் அணிக்காக போா்ஜா அக்லெசியாஸும் (89), எஸ்பான்யோலுக்காக ரௌல் டி தாமஸ் (45+1), நிகோ மெலாமெத் (65) ஆகியோரும் கோலடித்தனா்.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் மாா்சிலே 4-1 என்ற கோல் கணக்கில் லோரியன்ட் அணியை தோற்கடித்தது. மாா்சிலேவுக்காக புபக்கா் கமாரா (27), மேட்டியோ குவெண்டௌஸி (56, 90+2), அா்காடியஸ் மிலிக் (85) ஆகியோா் கோலடித்தனா். லோரியன்ட்டுக்காக 13-ஆவது நிமிஷத்தில் அா்மாண்ட் லௌரியான்டே ஸ்கோா் செய்தாா்.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ரோமாவையும், வெனெஸியா அதே கோல் கணக்கில் ஃபியோரென்டினாவையும் வீழ்த்தின. ஜுவென்டஸுக்காக மொய்சே கீன் 16-ஆவது நிமிஷத்திலும், ஃபியோரென்டினாவுக்காக ரிகாா்டோ சோடில் 77-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com