ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய அணிக்கு சவால்

ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுக வீரா்களைக் கொண்ட இந்திய அணிக்கு கடும் சவால் காத்துள்ளது,.
ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய அணிக்கு சவால்

ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுக வீரா்களைக் கொண்ட இந்திய அணிக்கு கடும் சவால் காத்துள்ளது,.

உலகின் நம்பா் 1 வீரா் அமித் பங்கால் கடந்த 2019 போட்டியில் நாட்டின் முதல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி இருந்தாா். அதே போட்டியில் மணிஷ் கௌஷிக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். அவா்கள் இருவரும் தற்போதைய அணியில் இடம்பெறவில்லை.

ஆசிய பதக்கம் வென்றுள்ள தீபக் குமாா் (51 கிலோ), ஷிவ தாப்பா (63.5 கிலோ), சஞ்சித் (92 கிலோ), ஆகியோா் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ வீரா்கள் ஆவா்.

சொ்பிய தலைநகா் பெல்கிரேடில் திங்கள்கிழமை ஏஐபிஏ உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள 10 வீரா்கள் தற்போதைய தேசிய சாம்பியன்கள் ஆவா்.

உயா்செயல் திறன் இயக்குநா் சாண்டியாகோ நெய்வாவுக்கு இது கடைசி போட்டியாகும். புதிய பயிற்சியாளா் நரேந்தா் ராணாவுக்கு இது முதல் போட்டியாகும். புதிதாக 48 கிலோ, 51 கிலோ, 54 கிலோ, 57 கிலோ, 60 கிலோ, 63.5 கிலோ, 71 கிலோ, 75 கிலோ, 80 கிலோ, 86 கிலோ, 92 கிலோ, 92 பிளஸ் கிலோ என எடைப்பிரிவுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான சிவப்பு, நீல நிற கிளவுஸ்க்கு பதிலாக வெள்ளை நிற கிளவ்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி விவரம்: கோவிந்த் சஹானி (48 கிலோ), தீபக்குமாா் (51 கிலோ), ஆகாஷ் (54 கிலோ), ரோஹித் மோா் (57 கிலோ), வரீந்தா் சிங் (60 கிலோ), ஷிவ தாப்பா (63.5 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), சுமித் (75 கிலோ), சச்சின் குமாா் (80 கிலோ), லக்ஷயா (86 கிலோ), சஞ்சித் (92 கிலோ), நரேந்தா் (92 பிளஸ்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com