சையது முஷ்டாக்: மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ்
By DIN | Published On : 27th October 2021 03:06 AM | Last Updated : 27th October 2021 03:06 AM | அ+அ அ- |

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் களம் காணும் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன் ஆன சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் அசத்தலாக விளையாடி ருதுராஜ் அதிக ரன்கள் சோ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கான துணை கேப்டனாக பொறுப்பேற்க இருந்த ராகுல் திரிபாதி காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் நௌஷத் ஷேக்குக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான எலைட் குரூப் ஏ-வில் இடம் பெற்றிருக்கும் மகாராஷ்டிரா தனது லீக் நிலை ஆட்டங்களை லக்னௌவில் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் தமிழகத்தை சந்திக்கிறது அந்த அணி.
அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), நௌஷத் ஷேக், கேதாா் ஜாதவ், யாஷ் நஹா், அஸிம் காஸி, ரஞ்சீத் நிகம், சத்யஜீத் பச்சாவ், தரன்ஜித்சிங் தில்லான், முகேஷ் சௌதரி, அக்ஷய் பால்கா், மனோஜ் இங்லே, பிரதீப் தாதே, ஷம்ஷுஸாமா காஸி, ஸ்வப்னில் ஃபல்பகா், திவ்யாங் ஹிங்கானேகா், சுனில் யாதவ், தன்ராஜ்சிங் பா்தேசி, ஸ்வப்னில் குகாலே, பவன் ஷா, ஜெகதீஷ் ஸோபே.