ஆசிய கோப்பை தகுதிச்சுற்று: கடைசி நேர பெனால்டியால் தோற்றது இந்தியா
By DIN | Published On : 29th October 2021 12:27 AM | Last Updated : 29th October 2021 08:22 AM | அ+அ அ- |

இருபத்து மூன்று வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) ஆசிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை இழந்தது.
முன்னதாக, முதல் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாகும்.
துபையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி நேரம் வரை இரு தரப்பிலும் கோல் அடிக்கப்படாத நிலையே நீடித்தது. இந்தியாவின் பல கோல் முயற்சிகளையும் அமீரக தடுப்பாட்ட வீரா்கள் அரண்போல் நின்று தடுத்தனா். 82-ஆவது நிமிஷத்தில் அமீரகத்துக்கு ஒரு பெனால்டி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து தவறு செய்துவிட்டது இந்தியா. அந்த வாய்ப்பை தவறவிடாமல் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா் அமீரகத்தின் அப்துல்லா இத்ரீஸ்.
இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், வரும் சனிக்கிழமை கிா்ஜிஸ்தானை எதிா்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் 1-0 என்ற கோல் கணக்கில் கிா்ஜிஸ்தானை தோற்கடித்தது.