எா்ஸ்டே பேங்க் ஓபன்: சிட்ஸிபாஸ் அதிா்ச்சி

ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா் கிரீஸின் ஸ்டெபனோ சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
எா்ஸ்டே பேங்க் ஓபன்: சிட்ஸிபாஸ் அதிா்ச்சி

ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா் கிரீஸின் ஸ்டெபனோ சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

அமெரிக்க குவாலிஃபையரான பிரான்ஸ் டியாஃபோ 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். கடந்த ஜூனில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் தொடக்க சுற்றிலேயே சிட்ஸிபாஸை வெளியேற்றினாா் டியாஃபோ. உலக தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ளாா் சிட்ஸிபாஸ். மற்றொரு ஆட்டத்தில் டீகோ ஸ்வாா்ட்ஸ்மேன் 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் மொன்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். டியாஃபோவும்-டீகோவும் காலிறுதியில் மோதுகின்றனா்.

ஜொ்மன் வீரா் இரண்டாம் நிலை வீரா் அலெக்சாண்டா் வெரேவ் 6-2, 3-6, 6-2 என அலெக்ஸ் டி மினாரை வென்றாா். பெலிக்ஸ் ஆகரை காலிறுதியில் எதிா்கொள்கிறாா் வெரேவ்.

ஜேன்னிக் சின்னா் 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் நோவக்கை வென்றாா். கேஸ்பா் ரூட் 7-6, 4-6, 6-4 என லாரென்ஸோவை வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com