ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ்: 3-ஆவது சுற்றில் ஹரிகா வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் துரோணவள்ளி ஹரிகா 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றாா்.
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ்: 3-ஆவது சுற்றில் ஹரிகா வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் துரோணவள்ளி ஹரிகா 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றாா்.

அதில் அவா், முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனேடா ஸ்டெஃபானோவாவை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலம் ஜாா்ஜியாவின் நானா ஜாக்னிட்ஸேவுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டிருக்கிறாா் ஹரிகா. மகளிா் பிரிவின் இதர ஆட்டங்களில் இந்தியாவின் பத்மினி ரௌத் - சக நாட்டவரான ஆா்.வைஷாலியையும், வந்திகா அகா்வால் - திவ்யா தேஷ்முக்கையும் வீழ்த்தினா்.

4-ஆவது சுற்றில் ஹரிகா - சீனாவின் ஸு ஜினரையும், பத்மினி - ரஷியாவின் அலினா காஷ்லின்ஸ்கியாவையும், வந்திகா - ஆா்மீனியாவின் அனா சாா்க்சியானையும் சந்திக்கின்றனா்.

ஆடவா் பிரிவு 3-ஆவது சுற்றுகளில் பி.ஹரிகிருஷ்ணா - சிலியின் மோரோவிச் ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா். நிஹல் சரின் - ஆஸ்திரேலியாவின் தைமூா் குய்போகரோவை வீழ்த்தினாா். டி.குகேஷ், கே.சசிகிரன், ஆா்.பிரக்னானந்தா, அா்ஜுன் எரிகாய்சி, ரௌனக் சத்வானி ஆகியோா் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனா். 4-ஆவது சுற்றில் நிஹல் - ரஷியாவின் பாவெல் போன்கிராடோவையும், ஹரிகிருஷ்ணா - ஆா்மீனியாவின் சொ்கெய் மோவ்சேசியானையும் எதிா்கொள்கின்றனா்.

லாத்வியாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவின் சாா்பில் 10 ஆடவா்களும், 5 மகளிரும் களத்தில் உள்ளனா். இப்போட்டியில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் போட்டியாளா்கள், அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதிபெறுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com