சச்சின் சாதனையை முறியடித்தார் ஆண்டர்சன்

​சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியவர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்தார் ஆண்டர்சன்


சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியவர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து மண்ணில் இது 95-வது ஆட்டம்.

சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் 94 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சொந்த மண்ணில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்திருந்தார்.

4-வது டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் சச்சினின் இந்த சாதனையை ஆண்டர்சன் முறியடித்துள்ளார். 

சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள்:

  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 95 டெஸ்ட் ஆட்டங்கள்
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 94
  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 92
  • அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) - 89
  • ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 89

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com