டி20: நியூஸி.யை வென்ற வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர்.

டாக்கா: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.

டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 16.5 ஓவா்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, பின்னா் ஆடிய வங்கதேசம் 15 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லதாம், ஹென்றி நிகோலஸ் ஆகியோா் தலா 18 ரன்கள் அடித்தனா். வங்கதேச பௌலிங்கில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் ஆடிய வங்கதேசத்தில் ஷகிப் அல் ஹசன் 25 ரன்கள் சோ்க்க, முஷ்ஃபிகா் ரஹீம் 16, கேப்டன் மஹ்முதுல்லா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். நியூஸிலாந்து தரப்பில் அஜஸ் படேல், கோல் மெக்கோன்சி, ரச்சின் ரவிந்திரா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com