அருமையான தொடக்கத்தை அளித்த ரோஹித் சர்மா & ராகுல்: இந்தியா மதிய உணவு இடைவேளையில் 108/1

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து முன்னிலை...
அருமையான தொடக்கத்தை அளித்த ரோஹித் சர்மா & ராகுல்: இந்தியா மதிய உணவு இடைவேளையில் 108/1

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 81 ரன்களும் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தார்கள். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 20, கே.எல். ராகுல் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 56 ரன்கள் பின்தங்கியிருந்தது.

3-ம் நாளன்று ஓரளவு பேட்டிங்குக்குச் சாதகமான சூழலை ரோஹித் சர்மாவும் ராகுலும் நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். விக்கெட்டைப் பறிகொடுக்காமல் நிதானமாக ரன்களைச் சேர்த்தார்கள். எனினும் 34-வது ஓவரில் ராகுலை 46 ரன்களில் வீழ்த்தினார் ஆண்டர்சன். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 83. இந்தத் தொடரிலும் ரோஹித்தும் ராகுலும் சராசரியாக 20.3 ஓவர்கள் விளையாடியுள்ளார்கள். இங்கிலாந்தில் 1999-ம் ஆண்டு முதல் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட தொடக்க வீரர்களில் இந்த ஜோடிக்கு 2-வது இடம்.  அடுத்த டெஸ்டில் மேலும் 29 பந்துகளை எதிர்கொண்டாலே இந்த ஜோடி முதலிடத்துக்கு வந்துவிடும். அந்தளவுக்குச் சிறப்பாக இருவரும் விளையாடி வருகிறார்கள். 

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 42 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 47, புஜாரா 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com