2-வது டி20: நியூசிலாந்தை மீண்டும் தோற்கடித்த வங்கதேசம்

நியூசிலாந்து அணி இலக்கை அடைய போராடியது. எனினும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது...
லதம் (கோப்புப் படம்)
லதம் (கோப்புப் படம்)

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது வங்கதேச அணி.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. அந்த அணியை 60 ரன்களுக்குள் சுருட்டி முதல் டி20 ஆட்டத்தை வென்றது வங்கதேசம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை அடைந்தது.

2-வது டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. கேப்டன் மஹ்முதுல்லா 37 ரன்களும் தொடக்க வீரர் முகமது நயிம் 39 ரன்களும் எடுத்தார்கள். ரச்சின் ரவிந்திரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி இலக்கை அடைய போராடியது. எனினும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லதம் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது. 3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com