பாக். பயிற்சியாளர்கள் மிஸ்பா, வக்கார் யூனிஸ் ராஜிநாமா

​பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.

ராஜிநாமா முடிவை இருவரும் திங்கள்கிழமை காலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர்கள் தெரிவித்தனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 5 டி20 ஆட்டங்களில் விளையாட செப்டம்பர் 11-ம் தேதி பாகிஸ்தான் வருகின்றனர். இதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 8-ம் தேதி இஸ்லாமாபாத்தில் கூடுகிறது. இந்த நிலையில் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புகளிலிருந்து முறையே மிஸ்பா மற்றும் வக்கார் விலகியிருப்பது சிக்கலை உண்டாக்கியது.

இதனால், நியூசிலாந்து தொடர்களுக்கு முன்னாள் வீரர்கள் சக்லைன் முஷ்டக் மற்றும் அப்துல் ரசாக் இடைக்காலப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிஸ்பா-உல்-ஹக்கும், வக்கார் யூனிஸும் கடந்த 2019 செப்டம்பர் மாதம் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடைய இன்னும் ஓராண்டு மீதமுள்ள நிலையில், இருவரும் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com