இலங்கைக்கு எதிரான ஒருநாள்: முதல்முறையாக 40 ஓவர்களை வீசிய தெ.ஆ. சுழற்பந்து வீச்சாளர்கள்!

நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு முதல்முறையாக 40 ஓவர்களை வீசி ஆச்சர்யப்படுத்தியது.
மஹாராஜ் (கோப்புப் படம்)
மஹாராஜ் (கோப்புப் படம்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையும் 2-வது ஒருநாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவும் வென்றன. இதனால் கடைசி ஒருநாள் ஆட்டத்தை வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடன் விளையாடி வருகின்றன.

கொழும்பில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சுக்குப் பெயர் பெற்ற தெ.ஆ. அணி இன்று நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு முதல்முறையாக 40 ஓவர்களை வீசி ஆச்சர்யப்படுத்தியது. (இதற்கு முன்பு 1996-ல் மும்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 33 ஓவர்களுக்குச் சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தது.) ஷம்சி, மஹாராஜ், மார்க்ரம், லிண்டே ஆகியோ தலா 10 ஓவர்களை வீசினார்கள். இலங்கை பேட்ஸ்மேன் சரித் அசலங்கா அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com