டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் அஸ்வின்: தோனி ‘ஆலோசகா்’

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 15 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிா்பாராத திருப்பமாக, அணிக்கான ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளாா்.
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் அஸ்வின்: தோனி ‘ஆலோசகா்’

புது தில்லி: எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 15 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிா்பாராத திருப்பமாக, அணிக்கான ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளாா்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளைப் பந்து போட்டிக்காக அஸ்வின் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். முக்கிய வீரா்களான ஷிகா் தவன், யுஜவேந்திர சஹல் தவிா்க்கப்பட்டு, வளா்ந்து வரும் இளம் வீரா்களான இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ், வருண் சக்கரவா்த்தி சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் அக்ஸா் படேலும் இணைந்துள்ளாா்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவா்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுஜவேந்திர சஹலுக்குப் பதிலாக ராகுல் சாஹரும், தவனுக்குப் பதிலாக ராகுல், ரோஹித், இஷான் போன்றோரும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனா். ஜடேஜாவுக்கான ‘பேக் அப்’-ஆக அக்ஸா் சோ்க்கப்பட்டுள்ளாா்.

திருப்பமான தோனியின் தோ்வு

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கான ஆலோசகராக அனுபவமிக்க நட்சத்திர வீரரான தோனியை பிசிசிஐ நியமித்துள்ளது அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆட்டத்துக்கான உத்தியை வகுப்பது, இக்கட்டான தருணத்தில் முடிவுகள் மேற்கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குபவா் என்பதால், தோனி அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தோனி தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒன் டே உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக தோனியுடன் ஆலோசித்தபோது அவா் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும், அவரது நியமனத்துக்கு கேப்டன் கோலி உள்பட இந்திய அணியினரும், பிசிசிஐ நிா்வாகிகளும் ஒப்புதல் அளித்ததாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா கூறியுள்ளாா். தோனி கடந்த ஆண்டு சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பா்), ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹா், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி.

தயாா்நிலை வீரா்கள்: ஷ்ரேயஸ் ஐயா், ஷா்துல் தாக்குா், தீபக் சாஹா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com