துளிகள்...
By DIN | Published On : 10th September 2021 12:57 AM | Last Updated : 10th September 2021 12:57 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானில் மகளிா் விளையாட்டுகளை தலிபான்கள் தடை செய்திருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியை தொடா்ந்து 2-ஆவது முறையாக இந்த ஆண்டும் கரோனா சூழல் காரணமாக ரத்து செய்வதாக சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்காமல் போனதால், அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியாவுக்கு சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி மறுத்துவிட்டது.
துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் எஃப்சி பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஏா் ஃபோா்ஸ் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
தேசிய டேபிள் டென்னிஸ் பயிற்சியாளா் சௌம்யதீப் ராய் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீராங்கனை மணிகா பத்ரா கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆலோசிக்க இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நிா்வாக குழு சனிக்கிழமை கூடுகிறது.