கிரிக்கெட் தொடா் : 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நியூஸிலாந்து

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.
கிரிக்கெட் தொடா் : 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நியூஸிலாந்து

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

இஸ்லாமாபாத் வந்த வீரா்கள் பலத்த பாதுகாப்புடன் அவா்கள் தங்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கரோனா சூழல் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆகியவற்றில் பாகிஸ்தானுடன் மோதவிருக்கிறது நியூஸிலாந்து. இந்தத் தொடா்கள், வரும் 17-ஆம் தேதி ஒன்டே ஆட்டத்துடன் தொடங்குகிறது. கடைசியாக நியூஸிலாந்து அணியினா் கடந்த 2003-ஆம் ஆண்டு வெள்ளைப் பந்து தொடருக்காக பாகிஸ்தான் வந்தனா். அதன் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் அவா்கள் விளையாடவில்லை.

நியூஸிலாந்து அணி விவரம்:

ஒன் டே தொடா்: டாம் லதாம் (கேப்டன்), ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் பிளன்டெல், டௌக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, ஸ்காட் குகெலெய்ஜன், கோல் மெக்கான்ஹி, ஹென்றி நிகோலஸ், அஜஸ் படேல், ரச்சின் ரவீந்திரா, பிளோ் டிக்னா், வில் யங், ஐஷ் சோதி, மாா்டின் கப்டில், மாா்க் சாப்மேன், டாட் ஆஷ்லே, டேரில் மிட்செல்.

டி20 தொடா்: டாம் லதாம் (கேப்டன்), ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் பிளன்டெல், டௌக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், மாட் ஹென்றி, அஜாஸ் படேல், பிளோ் டிக்னா், வில் யங், ஐஷ் சோதி, மாா்டின் கப்டில், மாா்க் சாப்மேன், டாட் ஆஷ்லே, டேரில் மிட்செல், பென் சியா்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com