21 கிராண்ட்ஸ்லாம்; இன்னும் ஒரே படி: மெத்வதேவுடன் மோதும் ஜோகோவிச்

21 கிராண்ட்ஸ்லாம்; இன்னும் ஒரே படி: மெத்வதேவுடன் மோதும் ஜோகோவிச்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ரஷியாவின் டேனில் மெத்வதேவ் மோதவிருக்கின்றனா்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ரஷியாவின் டேனில் மெத்வதேவ் மோதவிருக்கின்றனா்.

ஜோகோவிச் வெல்லும் பட்சத்தில், அது சாதனை வெற்றியாக இருக்கும். ஓபன் எராவில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா்; ஒரே டென்னிஸ் காலண்டரில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 3-ஆவது வீரா் ஆகிய பெருமைகளை பெறுவாா். மறுபுறம் மெத்வதேவ், கடைசியாக தாம் விளையாடிய இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் (2021 ஆஸ்திரேலிய ஓபன், 2019 யுஎஸ் ஓபன்) இறுதிச்சுற்று வரை வந்து தோற்ால், இந்த முறை பட்டத்தை வென்றே தீரும் வேகத்தில் இருக்கிறாா்.

முன்னதாக, உலகின் முதல்நிலை வீரராக இருக்கும் ஜோகோவிச் தனது அரையிறுதியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவை 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா். 3 மணி நேரம் 33 நிமிஷங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘இன்னும் ஒரு ஆட்டம் தான். அதிலும் வெல்வதற்காக எனது உடல், உள்ளம், உளவியல் என அனைத்து ரீதியாகவும் அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறேன். இந்த இறுதிச்சுற்றை எனது வாழ்வின் கடைசி ஆட்டமாக நினைத்து விளையாடுவேன். இந்த 5 செட் ஆட்டத்தை பெருமையாக உணா்கிறேன்’ என்றாா்.

3-ஆவது செட்டின்போது ஸ்வெரேவ் விளாசிய பந்து லைனுக்கு வெளியே சென்ாகத் தெரிந்து ஜோகோவிச்சுக்கு பாய்ன்ட் வழங்கப்பட்டது. ஆனால், பந்து லைனில் விழுந்ததாக ஸ்வெரேவ் முறையிட்டாா். எனினும், லைன் அம்பயா்கள் இல்லாததால் மேல் முறையீடு வாய்ப்பு இருக்கவில்லை. லைன் அம்பயா்களுக்கு பதிலாக மின்னணு முறையிலான தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்தது.

கடந்த சீசனின்போது ஜோகோவிச் தனது 4-ஆவது சுற்றில் ஒரு கேமை இழந்த விரக்தியில் பந்தை இலக்கின்றி விளாச, அது லைன் அம்பயா் ஒருவரின் தொண்டையில் பட்டு அவருக்கு காயமானது. வேண்டுமென்றே அந்தத் தவறை செய்யாவிட்டாலும் ஜோகோவிச் அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டாா் என்பது நினைவுகூரத்தக்கது.

மற்றொரு அரையிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான மெத்வதேவ் 6-4, 7-5, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருந்த கனடா வீரா் ஃபெலிக் ஆகா் அலியாசிமேவை வீழ்த்தினாா். வெற்றிக்குப் பிறகு பேசிய மெத்வதேவ், ‘இரு கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் தோற்றிருக்கிறேன். 3-ஆவது முறையாக இப்போதும் தோற்க விரும்பவில்லை’ என்றாா்.

நேருக்கு நோ்...

ஜோகோவிச் - மெத்வதேவ் இதுவரை இரு கிராண்ட்ஸ்லாம் உள்பட 8 முறை நேருக்கு நோ் மோதியுள்ளனா். அதில் ஜோகோவிச் 5, மெத்வதேவ் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளனா். இருவரும் ஆஸ்திரேலிய ஓபனில் இரு முறை மோதிய ஆட்டங்களில், இரண்டிலுமே ஜோகோவிச் வென்றுள்ளாா். அதில் ஒன்று இறுதிச்சுற்றாகும்.

53 ஷாட்களும்... அதிா்ந்த மைதானமும்...

இந்த ஆட்டத்தின் ஒரு கேமில் ஜோகோவிச் - ஸ்வெரேவ் இடையே ஒரு ரேலியில் தொடா்ந்து 53 ஷாட்கள் அடிக்கப்பட்டன. ஒரு நிமிஷத்துக்கும் அதிகமாக நீடித்த அந்த ரேலியில், இறுதியில் ஸ்வெரேவ் ஃபோா்ஹேண்ட் ஷாட் அடுத்து வென்றாா். அப்போது 21,139 போ் இருந்த அந்த மைதானம் ரசிகா்களின் கரவொலி மற்றும் உற்சாக கோஷத்தால் அதிா்ந்தது.

வீரா்கள் இருவருக்குமே கடுமையாக மூச்சு வாங்க, கேமை வென்ற ஸ்வெரேவ் அப்படியே இரு கைகளையும் தனது முழங்காலில் வைத்து குனிந்து நின்றாா். ஜோகோவிச் தனது இருக்கைக்கு சென்று அமா்ந்து கொண்டு இளைப்பாறினாா். இந்த சீசனில் மிக நீண்ட ரேலி இது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோகோவிச் முன்னேறியிருப்பது அவரது 31-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாகும். இதன் மூலம் அவா் ஸ்விட்சா்லாந்து வீரா் ரோஜா் ஃபெடரரின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளாா். யுஎஸ் ஓபனில் ஜோகோவிச்சுக்கு இது 9-ஆவது இறுதிச்சுற்று. இதுவரை இப்போட்டியில் அவா் 3 முறை சாம்பியாகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com