அச்ச உணர்வால் தடுமாறி விட்டோம்: கேகேஆர் அணி நிலைமை பற்றி பயிற்சியாளர் மெக்கல்லம்

ஏழு ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.
அச்ச உணர்வால் தடுமாறி விட்டோம்: கேகேஆர் அணி நிலைமை பற்றி பயிற்சியாளர் மெக்கல்லம்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் சுமாராக விளையாடியுள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஏழு ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் தோற்றது தான் சிக்கலை வரவழைத்துள்ளது. 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி பற்றியும் தனது அணியின் நிலைமை பற்றியும் கேகேஆர் அணிக்கு அளித்த பேட்டியில் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இனி வரும் ஆட்டங்கள் எங்களுக்கானதாக இருக்க வேண்டும். அந்த நிலைமையில்தான் உள்ளோம். அடுத்த நான்கைந்து வாரங்களில் வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். நாங்கள் இனி எப்படி விளையாடி, எந்த இடத்தை அடைவோம் என்பது யாருக்குத் தெரியும்? 

இந்த ஐபிஎல் போட்டியில் அச்ச உணர்வால் தடுமாறி விட்டோம் என நினைக்கிறேன். அதை வீரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. நான் அதைச் செய்யாதது எனக்கான சவாலாகும். இனிமேல் நாங்கள் துணிச்சலுடன் விளையாட வேண்டும். நான் கடந்த மே மாதம் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, ஒரு பயிற்சியாளராக என் அணி வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என நினைக்கிறேன் என்பதை வீரர்கள் அறிந்துகொண்டார்கள். நல்ல அணியை நான் கட்டமைக்க வேண்டும். நான் கேகேஆர் அணியில் நீடிப்பதை விடவும் இந்த அணி நீடித்து இருக்க அதுதான் உதவும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com