இன்று முதல் தேசிய ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

தேசிய ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமை முதல் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெறவுள்ளது. 

பெல்லாரி: தேசிய ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமை முதல் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெறவுள்ளது. 

எதிர்வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்புடன் பல்வேறு முக்கிய போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறுவர். வெள்ளிப் பதக்கம் வெல்வோர் தேசிய முகாமில் இடம் பிடிப்பர். தேசிய முகாமில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பிடிக்கும் போட்டியாளர்கள் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெறுவார்கள். வரும் அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும். 

போதிய பயிற்சி நேரம் இல்லாமல் போன காரணத்தால், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிவ தாபா (அஸ்ஸாம்), கெüரவ் பிதுரி (ரயில்வேஸ்), முகமது ஹஸாமுதின் (சர்வீசஸ்), தீபக் குமார் (சர்வீசஸ்), அமித் பங்கால் ஆகிய 5 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. எனினும், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அரசு துறைகளின் விளையாட்டு வாரியங்கள் ஆகியவற்றிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்பர். 

இப்போட்டியில் 48 கிலோ, 51 கிலோ, 54 கிலோ, 57 கிலோ, 60 கிலோ, 63.5 கிலோ, 67 கிலோ, 71 கிலோ, 75 கிலோ, 80 கிலோ, 86 கிலோ, 92 கிலோ, 92 கிலோவுக்கு மேல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் பங்கேற்க வரும் போட்டியாளர்கள், அவர்களது அணியினர் ஆகியோர் பெல்லாரிக்கு வந்தடைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனை சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com