வங்கதேசம் செல்கிறது பாக்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக, வரும் நவம்பரில் வங்கதேசம் செல்கிறது. 


கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக, வரும் நவம்பரில் வங்கதேசம் செல்கிறது. 
பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் - டிசம்பரில் டாக்கா, சத்தோர்கம் நகரங்களில் நடைபெறவுள்ளது.  இதில் டெஸ்ட் தொடரானது, ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. கடைசியாக பாகிஸ்தான் அணி கடந்த 2015-இல் வங்கதேசம் வந்திருந்தபோது 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. 

டி20 தொடர் 

முதலாவது ஆட்டம்  
-நவம்பர் 19 - டாக்கா 
2-ஆவது ஆட்டம்  
-நவம்பர் 20 - டாக்கா 
3-ஆவது ஆட்டம் 
-நவம்பர் 22 - டாக்கா 
டெஸ்ட்  தொடர் 
முதல் டெஸ்ட் - நவம்பர் 26
 -சத்தோர்கம் 
2-ஆவது டெஸ்ட் - டிசம்பர் 4 
 -டாக்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com