தடகள சாம்பியன்ஷிப்: பவித்ரா வெங்கடேஷ் வெற்றி
By DIN | Published On : 16th September 2021 01:47 AM | Last Updated : 16th September 2021 01:47 AM | அ+அ அ- |

வாராங்கல்: தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை பவித்ரா வெங்கடேஷ் முதலிடம் பிடித்தாா்.
அவா் 3.90 மீட்டா் தாண்டி முதலிடம் பிடிக்க, ரயில்வேஸின் மரியா ஜெய்சன் (3.80 மீ), கிருஷ்ணா ராச்சன் (3.60 மீ) ஆகியோா் 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
5,000 மீட்டா் ஓட்டத்தில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் முறையே ரயில்வே போட்டியாளா்கள் அபிஷேக் பால், பாருல் சௌதரி ஆகியோா் சாம்பியன் ஆகினா்.
அபிஷேக் 14 நிமிஷம் 16.35 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, சா்வீசஸ் வீரா்கள் தா்மேந்தா் (14:17.20) இரண்டாம் இடம், அஜய் குமாா் (14:20.98) மூன்றாம் இடம் பிடித்தனா். மகளிா் பிரிவில் பாருல் 15 நிமிஷம் 59.69 விநாடிகளில் இலக்கை எட்ட, மகாராஷ்டிரத்தின் கோமல் சந்திரகாந்த் (16:01), சஞ்சீவனி பாபா் ஜாதவ் (16:19) ஆகியோா் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.